ETV Bharat / international

குவெட்டா குண்டுவெடிப்பு: 3 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயம் - குவெட்டா நகர்

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடந்த தற்கொலை படை நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

குவெட்டா குண்டுவெடிப்பு, பாகிஸ்தான் குண்டுவெடிப்பு
குவெட்டா குண்டுவெடிப்பு
author img

By

Published : Sep 5, 2021, 4:31 PM IST

இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

காலை 7.30 மணிக்கு, குவெட்டா நகரில், பயங்கர வெடிபொருட்களுடன் பைக்கில் சுற்றிய பயங்கரவாதி, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதில் வெடித்து சிதறிய வாகனத்தில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டனர். ரோந்து செல்லும் நேரத்தில் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள், சுமார் 5 முதல் 6 கிலோ வரையுள்ள வெடிபொருட்களை தற்கொலை படை பயங்கரவாதி வெடிக்கச்செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. இந்த அபாயகர நிகழ்வு குறித்து பாகிஸ்தான் அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.