ETV Bharat / international

சீனா-பாக். பொருளாதார வழித்தடம்: பாதுகாப்புப் பணியில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள்!

author img

By

Published : Dec 5, 2020, 8:15 AM IST

டெல்லி: சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்தை (சிபிஇசி) பாதுகாக்க சுமார் 25 ஆயிரம் ராணுவ வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த சீனாவும் பாகிஸ்தானும் முடிவுசெய்துள்ளன.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிதடம்
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிதடம்

சீனாவையும், பாகிஸ்தானையும் சாலை, ரயில் பாதை மற்றும் எண்ணெய், எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்கள் மூலம் இணைக்கும் சீனா-பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழித்தடம் 7000 கோடி அமெரிக்கா டாலர் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் இந்தத் திட்டம், மேற்கு சீனாவின் காஷ்கரை அரேபிய கடல் கடற்கரையில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும். சீனா இந்தியப் பெருங்கடலை எளிதில் அணுக இந்தத் திட்டம் வழிவகுக்கும். அதே வேளையில், பாகிஸ்தான் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த இந்தப் பொருளாதார வழித்தடம் உறுதியளிக்கிறது.

இந்நிலையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (சிபிஇசி) பாதுகாக்க சுமார் 25 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப சீனாவும் பாகிஸ்தானும் முடிவுசெய்துள்ளன.

இந்த விவகாரத்தை நன்கு அறிந்த பல இந்திய ராணுவ அலுவலர் வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, "சிறப்புச் சேவைகள் பிரிவு வடக்கு (எஸ்.எஸ்.டி.என்.), சிறப்புச் சேவைகள் பிரிவு தெற்கு (எஸ்.எஸ்.டி.எஸ்.) என அழைக்கப்படும் 34, 44 லைட் காலாட்படை பிரிவுகள் இந்தப் பொருளாதார வழித்தடத்தில் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு பிரிவுகளும் தலா மூன்று படைப்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அதில், பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள், பஞ்சாப், சிந்து நாட்டைச் சேர்ந்த ரேஞ்சர்ஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் என மொத்தம் 25ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகத் தெரிகிறது.

எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் சீனா மேற்கொண்டுவருகிறது.

பொருளாதார வழித்தடத்தை பாதுகாக்கிறோம் என்ற போலியான பின்பத்தை காரணம்காட்டி, ட்ரோன்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு சீனா வாங்குகிறது" என்று அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

குறைந்த விலை ட்ரோன்களைத் தவிர, 2022ஆம் ஆண்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 039 ஏ யுவான் நீர்மூழ்கிக் கப்பலை சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், சீனா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் கடற்படைக்கு எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் சீனா வழங்கவுள்ளது.

இந்தியாவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டருக்கு இணையான, சீன இசட் -10 தாக்குதல் ஹெலிகாப்டரை பாகிஸ்தானுக்கு வாங்குகிறது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் மக்கள் போராட்டம் - சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.