ETV Bharat / international

பாகிஸ்தானில் இந்து கோயில் தாக்குதல்- 20 பேர் கைது, 150 பேர் மீது வழக்குப்பதிவு! - இந்து

பாகிஸ்தானில் இந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் பஞ்சாப் மாகாண காவலர்கள் 20 பேரை கைதுசெய்தனர். 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Hindu temple
Hindu temple
author img

By

Published : Aug 7, 2021, 3:53 PM IST

லாகூர் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குள் புகுந்த கும்பல் வன்முறையாளர்கள் கோயிலை அடித்து நொறுக்கி தாக்குதல் நடத்தினார்கள்.

இது தொடர்பாக காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்தத் தாக்குதலை கண்டித்து இந்தியா, அந்நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் கோயில் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும்., இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் காணொலியில் தோன்றும் நபர்களை முதலில் கைதுசெய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். அதன்படி முதல்கட்டமாக 20 பேர் பஞ்சாப் மாகாண காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  • Attack on Hindu temple at Bhong City District Rahimyar Khan Punjab. Situation was tense since yesterday. Negligence by local police is very shameful. Chief Justice is requested to take action. pic.twitter.com/5XDQo8VwgI

    — Dr. Ramesh Vankwani (@RVankwani) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் 150 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ரஹிம் யார் கான் மாவட்ட காவல் அலுவலர் ஆஸாத் சர்பிரஸ் கூறுகையில், “கோயிலுக்குள் சென்று கல் மற்றும் கம்பு கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிலைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் சுமார் ஒரு கோடி பேர் உள்ளனர். இதில் குறிப்பாக பஞ்சாப், சிந்து மாகாணத்தில் அதிகம் இந்துக்கள் வசிக்கின்றனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் கோயில் மீது தாக்குதல்- இந்தியா கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.