பலுசிஸ்தான் மாகாணத்தின் குவேட்டா நகரில் உள்ள சந்தை பகுதியில் நேற்று பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்தக் கோர தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டுவெடிப்பில் கடைகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பலுசிஸ்தான் மாகாண முதலமைச்சர் ஜாம் கமால், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.


இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பெற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.