கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் நங்கர்ஹார். இப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று மதியம் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் மசூதியில் பிரார்த்தனை செய்யக் கூடியிருந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் மசூதியின் கூரையும் இடிந்து விழுந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் வன்முறை ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாக நேற்றுதான் ஐநா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாட்டி உன் காசு வேண்டாம் பாசம் போதும் - நெகிழ வைத்த பிரேசில் திருடன்