இந்தியாவில் சிக்கிக்கொண்ட 179 பாகிஸ்தான் குடிமக்கள் இன்று அட்டாரி - வாகா எல்லைப் பகுதி வழியாகத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் இந்தியாவில் சிக்கிக்கொண்ட நிலையில் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் பாகிஸ்தான் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
பொதுப்போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பமுடியாமல் தவித்துவருகின்றனர். குறிப்பாக விமான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 179 பேர் இந்தியாவில் கடந்த மூன்று மாத காலமாகச் சிக்கித் தவித்துவந்துள்ளானர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று அட்டாரி - வாகா எல்லை வழியாகப் பாகிஸ்தான் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இது சும்மா ட்ரைலர் தான்; கரோனா குறித்து பீதியை கிளப்பும் சீனா 'வௌவால்' ஆராய்ச்சியாளர்