கடந்தாண்டு இறுதியில், சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சீனாவில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு வெளியே கனடா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1,716 மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா தற்போது அறிவித்துள்ளது. சீனாவில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 3.8 விழுக்காட்டினர் மருத்துவ ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட 1,716 மருத்துவ ஊழியர்களில் 1,502 பேர் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, இந்த வைரஸ் தொற்று முதலில் பரவிய வூஹான் நகரில் 1,102 மருத்துவ ஊழியர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு