கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரில் செயல்பட்டுவரும் ரசாயன ஆலையில் மார்ச் மாதம் 21ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அன்று மதியம் 2.48 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில், தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், பலத்த காயமடைந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மேலும் 17 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு டீயான்ஜின் மாகாணத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 160 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.