சீனாவுக்கு தைவானுக்கும் இடையே அன்மைக் காலமாக மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது. தெற்கு சீன கடல் பிராந்தியத்தில் சீனா தனது போர்கப்பலை நிறுத்தி தைவானை சீண்டிவருகிறது.
அதேபோல் தைவான் வான் எல்லைப்பகுதியிலும் தனது விமானங்களை செலுத்தி தைவானுக்கு அவ்வப்போது குடைச்சல் தந்துவருகிறது. இந்நிலையில், நேற்று சீனாவின் 13 போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைப் பகுதிக்குள் பறந்தன.
இதற்கு பதில்தரும் விதமாக, தைவானும் தனது வான் எல்லைகளில் ரோந்து விமானங்களை அனுப்பி கண்காணித்தது. மேலும், சீனாவின் ராணுவ விமானங்களை ரேடியோ சிக்னல்கள் மூலமாக கண்காணிக்கவும் செய்தது.
தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. சுமார் 2.4 கோடி மக்கள் தொகை கொண்ட தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து 70 ஆண்டுகள் தாண்டிய நிலையில், இந்த பிரிவை மீண்டும் இணைக்கும் முயற்சியில் சீனா மும்முரமாக செயலாற்றிவருகிறது.
ஆனால் தைவானோ, தன்னை தன்னாட்சி கொண்ட சுதந்திர பிராந்தியமாகவே கருதுகிறது. சுதந்திரம் என்றால் அது போரில்தான் முடியும் என்ற தீவிர நிலைப்பாட்டை சீனா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இதையும் படிங்க: சிகரெட்டுக்குத் தடை - அரசு அதிரடி