சீனாவின் தென் கிழக்கு மாகாணமான ஹூபே தலைநகர் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட வூஹான் நகரமே சில காலம் முடக்கப்பட்டது.
தற்போது, சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வூஹானிலும் கட்டுப்பாடுகள் மெல்ல தளர்த்தப்பட்டு இயல்வு வாழ்க்கை திரும்பிவருகிறது.
இந்நிலையில், ஆரம்ப காலத்தில் சீனாவில் மட்டும் பரவிய இந்த வைரஸ் தொற்று, தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் கொடியதாக உள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் சமீபத்தில் வருத்தம் தெரிவித்திருந்தது.
தற்போது, உலகெங்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 8,00,023 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 38,748 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,69,995 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக இத்தாலியில் 11,591 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். 1,01,739 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவிலும் 164,359 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, 3,173 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கரோனா - ஸ்பைஸ்ஜெட் பணியார்களுக்கு சம்பளம் கட்!