கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் இயக்கங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இந்த தாக்கமானது புத்தகத்தையும் விட்டுவைக்கவில்லை, உலக புத்தக தினத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள முக்கிய அமைப்புகள் மூலம் இதற்கான திட்டமிடல் மற்றும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தற்போதைய அசாதாரண சூழலால் உலக புத்தக தினக் கொண்டாட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உறுப்பு அங்கமாகக் கருதப்படும் யுனெஸ்கோ அமைப்பு உலக புத்தக தினத்தை உலக முழுவதும் உள்ள தனது கிளைகள் வாயிலாக ஆன்லைன் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்த இக்கட்டான சூழல்தான் புத்தக வாசிப்பிற்கான சரியான நேரம் எனத் தெரிவித்த யுனெஸ்கோ அமைப்பு, இன்றைய காலக்கட்டத்தில் நெருக்கடிகளை களைந்து மனதை ஒழுங்குப்படுத்த உலக மக்கள் அனைவருக்கும் உள்ள ஒரே தீர்வு புத்தகத்தில்தான் உள்ளது எனத் தெரிவிகத்துள்ளது.
இதையும் படிங்க: தனி விமானம் மூலம் இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் அமெரிக்கர்கள் மீட்பு!