ETV Bharat / international

'பயங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் சிறுபான்மையினர் கொல்லப்படுகிறார்கள்'

author img

By

Published : Sep 28, 2019, 3:15 PM IST

வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

pak activist

பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில். தேசத் துரோக செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர், அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

நியூயார்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குலாலாய், "பயங்கரவாதம் ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவி பஸ்தூன் (சிறுபான்மையினர்) மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை வதை முகாம்களில் அடைத்து, பாகிஸ்தான் ராணுவம் சித்திரவதை செய்துவருகின்றனர். பாகிஸ்தான் போன்று நாட்டில் ராணுவத்திற்கு எதிரான நாம் வாய் திறக்க முடியாது.

என்னையும், என் குடும்பத்தையும் அமெரிக்க வெளியுறவுத் துறை இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிடும் என பாகிஸ்தான் அரசு நினைக்கிறது. ஆனால் பஷ்தூன் மக்களுக்கு மீதான வன்முறைகள் குறித்து இங்கு இருந்துகொண்டே தொடர்ந்து போராடுவேன்" எனத் தெரிவித்தார்.

பெண்களின் உரிமைக்காக பாகிஸ்தானில் குரல் கொடுத்துவந்த குலாலாய் இஸ்மாயில் மீது தேசத் துரோக வழக்குப் பாய்ந்தது. இதையடுத்து, பாகிஸ்தானில் சுமார் ஆறு மறைந்திருந்த அவர், சில நண்பர்களின் உதவியோடு இலங்கைக்குத் தப்பிச் சென்றார். பின்னர். அங்கிருந்து அமெரிக்கா வந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.