"கேலி வில்கேஸ்" என்ற பெண்ணின் பேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் திடீரென்று வைரலாகியுள்ளது. பலரும் அவரின் பதிவை பகிர்ந்து ஆறுதல் தெரிவித்தும், வெகுளித் தனத்தை பாராட்டியும் வருகின்றனர்.
அந்த பதிவில், "இந்த அழகான தோற்றமுள்ள செடியை நான் இரண்டு ஆண்டுகளாக எனது சமைலறையின் ஜன்னல் அருகில் வைத்துள்ளேன். தினந்தோறும் செடிக்கு தண்ணீர் உற்றி பாதுகாத்தேன். யாரையும் எனது செடியின் அருகில் நெருங்கவிட மாட்டேன். இருப்பினும் நீண்ட காலமாக ஒரே குவளையில் இருப்பதால், மற்றொரு அழகான குவளையில் வைக்க முடிவு செய்தேன்.
பின்னர் செடியைப் பழைய குவளையிலிருந்து எடுக்கும்போது மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்தேன். ஏன்னென்றால், நான் இரண்டு ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்து வந்தது பிளாஸ்டிக் செடி என்பது தெரியவந்தது. இது எனக்கு எப்படித் தெரியாமல் போனது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளையும் நான் பொய்யாகவே கருதுகிறேன்" என்றார்.
இதைப் பார்த்த பல மக்கள், எங்களுக்கு இதே போன்ற அனுபவங்கள் நடைபெற்றது என ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆத்திரத்தில் அவ்வாறு செய்தேன்'- ஷாரூக் வாக்குமூலம்