அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புளூ ஆர்ஜின் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
விண்வெளி செல்லும் ஜெஃப் பெசோஸ்
இந்த புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் (New Shepard) ராக்கெட்டில் முதலவதாக சகோதரர் மார்க் உடன் விண்வெளிக்குச் செல்லவுள்ளதாக ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஜுலை 20ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏலத்தில் 143 நாடுகள்
மேலும், இந்தப் பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால், அந்த இருக்கை ஏலம் விடப்பட்டிருந்தது.
3ஆவது இருக்கைக்கான ஏலம் தொடங்கியதுமே 143 நாடுகளிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர். இறுதியாக, நேற்று(ஜுன்.12) 20க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் பங்கேற்றனர்.
28 மில்லியன் டாலர்
இந்நிலையில், அந்த இருக்கைக்கான ஏலம் 28 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 205 கோடியே 4 லட்சத்து 90 ஆயிரத்து 400 ரூபாய்) தொகைக்கு முடிவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நபர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பலே கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட்