ETV Bharat / international

கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் ஈரான், வட கொரியாவிற்கு உதவ தயார் - டொனால்ட் ட்ரம்ப் செய்திகள்

வாஷிங்டன்: கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கு உதவ முன்வருவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்

ஈரான், வட கொரியாவிற்கு உதவ தயார்
ஈரான், வட கொரியாவிற்கு உதவ தயார்
author img

By

Published : Mar 23, 2020, 12:56 PM IST

கோவிட் -19 வைரஸ் பெருந்தொற்றால் உலக நாடுகள் பெரும்பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஈராம், இத்தாலி, வட கொரியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு உதவ முன்வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவிக்கும்போது, ஈரான், வட கொரியா மட்டுமல்ல, கரோனாவால் பாதித்துள்ள பிற நாடுகளுக்கும் உதவ தயாராகயிருக்கிறோம். இந்த வைரஸால் 140 நாடுகள் பாதித்துள்ளன. நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டுவருகிறது. குறிப்பாக, ஈரானுக்கு இது மிகப்பெரிய இழப்பு. தற்போது, பொருளாதாரரீதியான உதவிகளுக்கு வாய்ப்பில்லை என்றாலும்கூட உடனிருப்போம். முதலில் எங்கள் நாட்டிலுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டுவர பல நாடுகளுக்கு நிதியுதவி அளித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், சீனாவைக் குறித்து அவர் பேசும்போது, நான் சீனாவின் அதிபரையும், அந்நாட்டையும் மதிக்கிறேன். குறைந்த காலத்தில் கரோனா போன்ற பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்த சாமர்த்தியம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த சூழலை சமாளிக்க உதவுவதாக எங்கள் தரப்பிலிருந்து தெரிவித்தோம், அதற்கு சீன அரசு எவ்வித பதிலுமளிக்காமல் அலட்சியப்படுத்தியது கவலையளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்கு பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை கைவிரித்த இம்ரான் கான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.