கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் தொற்றால் சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ஆயிரத்து 554 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் நான்கு விழுக்காட்டினர் உயிரிழக்கிறார்கள். அதிலும் 60 வயதைக் கடந்தவர்கள் என்றால் அதில் 15 விழுக்காட்டினர் உயிரிழக்கின்றனர். இதனால் இந்த வைரஸ் தொற்றால் இளைஞர்கள் யாரும் உயிரிழக்க மாட்டார்கள் என்பது போன்ற கருத்து பரவியது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், "இளைஞர்களுக்குக் கூற எனக்கு ஒரு செய்தி உள்ளது. இந்தக் கோவிட்-19 உங்களை பல வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலைக்குத் தள்ளும், ஏன் சில சமயங்களில் உங்களைக் கொல்லக்கூட செய்யும்.
நீங்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் உங்கள் மூலம் இந்த வைரஸ் பெரியவர்களுக்கும் பரவும் என்பதால் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இதன்மூலம் மற்றவர்களின் உயிரை இளைஞர்களாகிய நீங்கள் காப்பற்றலாம்" என்றார்.
இதையும் படிங்க: கோவிட்-19 இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு