கரோனாவின் தாக்கம் பல்வேறு நாடுகளில் குறைந்துவருகிறது. இருப்பினும், சில நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் கட்ட பரவல் தொடங்கியிருக்கிறது. பிரிட்டன் போன்ற நாடுகளில் ஊரடங்கு மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனக்கு எந்த விதமான அறிகுறிகளும் தென்படவில்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி அடுத்த சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்கிறேன். வீட்டிலிருந்து பணிபுரிய உள்ளேன்.
சுகாதார வழிகாட்டுதல்தளை பின்பற்றுவது முக்கியமாக கருதப்படுகிறது. இதன் மூலமாகவே கரோனா பரவலை தடுக்க முடியும். வைரஸை முடக்கி சுகாதார அமைப்பை பாதுகாக்க முடியும். உயிர்களை காப்பாற்றி அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மக்களுடன் நானும் எனது சக ஊழியர்களும் துணை நிற்போம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: பிடனைவிட ஏழு புள்ளிகள் முன்னிலை வகிக்கும் ட்ரம்ப்!