வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் அலுவலகமாக வெள்ளை மாளிகை நேற்று செய்தித்தொடர்பு செயலர் கெய்லி மெக்கெனமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "அதிபர் ட்ரம்ப் தன் சொந்த வருமானத்திலிருந்து அமெரிக்க சுகாதாரத் துறைக்கு ஒரு லட்சம் டாலரை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்" எனக் கூறியவாறே ட்ரம்ப் எழுதியதாகக் கூறப்படும் காசோலையை நிருபர்களுக்குத் தெரியும்படி காட்டினார்.
இதுகுறித்து டெய்லி மெயில் பத்திரிகையிடம் பேசிய வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவர், "பொதுவாகச் செய்தியாளர் சந்திப்பின்போது போலி காசோலைகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகையால் அது உண்மையான காசோலையாகத்தான் இருக்க வேண்டும்" என்றார்.
மெக்கெனமி தற்செயலாக ட்ரம்ப்பின் வங்கி விவரங்களை வெளிப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜூட் தீரே பேசுகையில், "(கரோனா) வைரஸை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தன் சம்பளத்தை அரசாங்கத்துக்குக் கொடுத்துள்ளனர். இதனை விட்டுவிட்டு காசோலை உண்மையா அல்லது போலியா என்ற தேவையற்ற விஷயத்தில் ஊடகங்கள் பொறுப்பில்லாமல் கவனம் செலுத்தி வருகின்றன" எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க : ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?