உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 5 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 96 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே கரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்கும் வேலைகள் வேகமாக நடந்துவந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் கிருமியியல் நிபுணர் ஆண்டனி ஃபவுசி கூறுகையில், ''கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. அதற்கான உதவிகள் விரைவில் வரும். டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தயாராகும். அப்படி தயாரானால், ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
அதுவரையில் மக்கள் முகக்கவசங்கள் அணிவது, கைகளை கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த சின்ன விஷயங்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வரும். மீண்டும் ஒரு ஊரடங்கு வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் அதிபருடன் நல்ல உறவு வைத்திருந்தேன். பிரிட்டன் பிரதமர் பேச்சால் சர்ச்சை!