அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் இன்று புறப்பட்டது சென்றது. 30 நிமிட பயணத்திற்குப் பிறகு, பயணிகளின் இருக்கை இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
இதனையடுத்து, பாஸ்டன் நகரிலுள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதில், பயணித்த 217 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விமானத்திலிருந்த அலைப்பேசி மின்னேற்றி(செல்போன் சார்ஜர்) மூலமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.