ETV Bharat / international

சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா - சீனா அமெரிக்கா பொருளாதாரத் தடை

வாஷிங்டன்: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக சீனா அரசுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் பொருளாதாரத் தடைவிதித்துள்ளது.

USA
USA
author img

By

Published : Jun 26, 2020, 11:39 AM IST

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஹாங்காங் பின்னர் சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்புப் பிராந்தியமாக விளங்குகிறது. ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகவைத்து தனது கட்டுக்குள் வைத்துக்கொள்ள சீனா பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற சிறப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் ஹாங்காங்கின் உரிமையைப் பறிக்கும்விதமாக இருப்பதாகக் கூறி அந்நாட்டில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

ஹாங்காங் உரிமைக்குரலுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றம் தற்போது முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. சீனாவின் இந்த சர்வாதிகாரப்போக்கை கண்டிக்கும்விதமாக அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கும் மசோதாவை அமெரிக்காவின் மேலவை உறுப்பினர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

அண்மைக்காலமாக சீனாவுடன் மோதல் கடைப்பிடித்துவரும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, சீனாவைச் சீண்டும்விதமாக ஹாங்காங் பகுதிக்கு அளித்துவந்த பொருளாதாரச் சலுகையை நிறுத்திவைத்தது.

இதையும் படிங்க: 'ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி' - பாகிஸ்தான் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.