ஜூன் 15-16ஆம் தேதிகளில் இந்திய- சீன எல்லையில் சீன வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இதனையடுந்து இந்த வார தொடக்கத்தில் இந்திய இறையாண்மை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதற்கு சீனத் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் சீன பயன்பாட்டுத் தடையை வரவேற்பு தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாம்பியோ, “இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டும் வண்ணம் சீன செயலிகளை தடை விதித்தை வரவேற்கிறேன்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் கண்காணிப்பு செய்யும் செயலிகள் தடை விதிப்பின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் ” என்றார்.
-
.@SecPompeo comments on the Chinese Communist Party, India's "Clean App" approach, and new humanitarian assistance funding to support Syria. (Full Podium Briefing 1/2) pic.twitter.com/rOdlNTlPjP
— Department of State (@StateDept) July 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@SecPompeo comments on the Chinese Communist Party, India's "Clean App" approach, and new humanitarian assistance funding to support Syria. (Full Podium Briefing 1/2) pic.twitter.com/rOdlNTlPjP
— Department of State (@StateDept) July 1, 2020.@SecPompeo comments on the Chinese Communist Party, India's "Clean App" approach, and new humanitarian assistance funding to support Syria. (Full Podium Briefing 1/2) pic.twitter.com/rOdlNTlPjP
— Department of State (@StateDept) July 1, 2020
இதற்கிடையில், “அமெரிக்க அதிபர் இந்தியா -சீனா எல்லை பிரச்னையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், மோதலை அமைதியான முறையில் தீர்க்க முற்படுகிறோம்” என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர்: காரணம் என்ன?