ETV Bharat / international

அமெரிக்காவில் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு! - ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓரிகான், கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இதுவரை 500 பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்திருப்பது அந்நாட்டு அரசால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு

author img

By

Published : Mar 9, 2020, 5:38 PM IST

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 3,800 பேர் உயிரிழந்தனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது அமெரிக்கா இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகிறது. இதனால் அங்கு சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், ஓரிகான், கலிபோர்னியா மாகாணங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக இந்தத் தொற்று வாஷிங்டன் மாகாணத்தில் பரவுவது கண்காணிக்கப்படாமல் இருந்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை அமெரிக்காவின் 30 மாகாணங்களில் இந்த நோய் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100-க்கும் அதிகமான நாடுகளில் புதிதாக கோவிட் - 19 பாதிப்புள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலை ‘பொது சுகாதார அவசரநிலை’ என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்ரம்ப் அரசாங்கம், சீனா, ஈரான், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்துள்ளது.

செனட் தரப்பிலிருந்து மருத்துவ உபகரணங்களுக்கு, 830 கோடி (8.3 பில்லியன் டாலர்) அமெரிக்க டாலர்கள் ஒதுக்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கப் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை என புகார் எழுந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதுபற்றி, போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பது பொய்யான தகவல். நாங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜனநாயக கட்சியும், ஊடகங்களும் என் அரசாங்கத்தை தவறாக சித்தரிக்க இதுபோன்ற வதந்திகளை பரப்பிவருகிறது என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸ்: களமிறங்கிய உலக சுகாதார அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.