ETV Bharat / international

கரோனா பாதிப்பு: இந்தியாவிற்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா! - corona virus

வாஷிங்டன்: கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

US provides 29 million to help india fight covid-19

author img

By

Published : Mar 29, 2020, 10:27 AM IST

சீனாவில் உருவான பெருந்தொற்று கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில், தொற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ள நாடுகளில், நோய் பரவுவதைக் கட்டுக்குள் வைக்க அமெரிக்கா நிதியுதவியை அறிவித்துள்ளது. இதில் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஆய்வகங்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டறியவும், தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலர் போனி கிளிக், “உலக சுகாதாரத்தை வழிநடத்துவதில், அமெரிக்காவின் சாதனையாக இந்த நிதியுதவி இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...அமெரிக்காவில் லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.