ETV Bharat / international

அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா மருந்து கிடைக்கும் வகையில் திட்டம்

author img

By

Published : Sep 16, 2020, 9:26 PM IST

வாஷிங்டன் : அமெரிக்காவில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் கொஞ்சமும் குறையாத நிலையில், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

கரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கரோனாவுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் ஏற்படும் என மக்கள் கருதுவதாகக் கருத்து பரவி வரும் நிலையில், அந்நாட்டின் சுகாதாரத்துறை நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மேலும், கரோனா மருந்து விநியோகம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டம் வகுத்தும் வருகிறது. இருப்பினும் சுகாதாரத் துறை பணியாளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் எனவும் அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

”மற்ற தொற்று நோய்களுக்கான மருந்தை விநியோகம் செய்வதில் உள்ள சவால்களைக் காட்டிலும் கரோனாவுக்கான மருந்தை விநியோகம் செய்வதில் மிகப்பெரிய சவால் உள்ளது. ஆனால் அதற்காக விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்திய ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் ’ஸ்புட்னிக் V’ விநியோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.