சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - கொய்தாவின் தலைவரான ஒசமா பின்லேடன் அமெரிக்க சீல் (SEAL) படையினரால் 2011 மே 2ஆம் தேதி பாகிஸ்தானில் சுட்டக்கொல்லப்பட்டார். அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கோபுர தகர்ப்பில் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டவர் ஒசமா.
இந்நிலையில் என்.பி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது. இதைப் பெயர் வெளியிட விரும்பாத மூன்று அமெரிக்க அரசு அலுவலர்கள் கூறியுள்ளனர். மேலும், ஹம்ஸா மரணம் எப்படி நடந்தது? அதில் அமெரிக்காவின் பங்கு உள்ளதா? உள்ளிட்ட தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கேட்டபோது தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார்.