சீனாவின் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ், தற்போது உலகெங்கிலும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவில் இந்த நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய்ப் பரவலைத் தடுக்கவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் திணறிவரும் அமெரிக்கா போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கரோனா பரிசோதனைக்காக மக்கள் வீட்டிலிருந்தபடியே மாதிரிகளைச் சேகரிக்க உதவும் கருவிகளை உற்பத்தி செய்ய, லேப்காப் என்ற நிறுவனத்துக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை (FDA) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனையடுத்து, வரும் நாட்களில் இந்தக் கருவிகளின் உற்பத்திப் பணித் தொடங்கும் எனக் கூறியுள்ள லேப்காப் நிறுவனம், முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தந்து, இந்தக் கருவிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் உள்ளது.
இதையும் படிங்க : முகக் கவசங்களை சுத்திகரிக்கும் கருவி - மதுரை இளைஞரின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு