ETV Bharat / international

இறுதிக்கட்டத்தில் அமெரிக்க தேர்தல்: முக்கிய மாகாணங்களை கைப்பற்றிய ட்ரம்ப்! - பிடன்

வாஷிங்டன்: அமெரித்த அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், ப்ளோரிடா, ஒஹியோ ஆகிய மாகாணங்களில் குடியரசு கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.

அமெரிக்க தேர்தல்
அமெரிக்க தேர்தல்
author img

By

Published : Nov 4, 2020, 12:53 PM IST

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற நிலையில், அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், 29 எலக்டோரல் வாக்குகள் உள்ள ப்ளோரிடா மாகாணத்திலும் 18 எலக்டோரல் வாக்குகள் உள்ள ஒஹியோ மாகாணத்திலும் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, 20 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ள பென்சில்வேனியாவிலும் 16 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ள ஜார்ஜியாவிலும் குடியரசு கட்சி முன்னிலை வகிக்கிறது.

பென்சில்வேனியாவில் 56 விழுக்காடு வாக்குகளையும் ஜார்ஜியாவில் 50 விழுக்காடு வாக்குகளை பெற்று ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். 1992ஆம் ஆண்டிலிருந்து, பென்சில்வேனியாவில் ஜனநாயக கட்சியே வெற்றிபெற்றுவந்தது. ஆனால், 2016ஆம் அங்கு குடியரசு கட்சி வெற்றிபெற்றது. குடியரசு கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஜார்ஜியாவில் கருப்பின மக்கள் தொகை அதிகரித்துவருவதால் அங்கு போட்டி சவாலாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மாகாணங்களின் நிலவரம்
மாகாணங்களின் நிலவரம்

கடந்த 1964ஆம் ஆண்டிலிருந்து, ஒரு முறையை தவிர்த்து மற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றியாளரின் பக்கமே ப்ளோரிடா வாக்களித்துள்ளது. அதேபோல், ஒஹியோ மாகாணமும் வெற்றியாளர் பக்கமே வாக்களித்து வந்துள்ளது.

தேர்தல் முடிவுகள்

ஜனநாயக கட்சியின் கோட்டையாக கருதப்படும் கலிபோர்னியாவிலும் வாஷிங்டனிலும் பிடனே வெற்றிபெற்றுள்ளார். அதேபோல், ஓரிகன், நியூ மெக்சிகோ, கொலராடோ, நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் பிடன் வெற்றிபெற்றுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின் படி, 225 எலக்டோரல் வாக்குகள் பிடனுக்கும் 213 எலக்டோரல் வாக்குகள் ட்ரம்புக்கும் பதிவாகியுள்ளன. அதிபராவதற்கு 270 எலக்டோரல் வாக்குகள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உடனுக்குடன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.