ETV Bharat / international

சீன ஊடகங்களுக்கு கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா! - வெளிநாட்டுப் பணிகள் சீனா ஊடகம்

வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த நான்கு செய்தி நிறுவனங்களை வெளிநாட்டுப் பணிகள் செய்யும் நிறுவனங்களாக அறிவித்து அமெரிக்க அரசு கட்டுப்படுகளை விதித்துள்ளது.

US Media
US Media
author img

By

Published : Jun 23, 2020, 11:57 AM IST

அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்றுவரும் மறைமுக மோதல் கரோனா பாதிப்புக்குப்பின் அடுத்தக்கட்டதை எட்டியுள்ளது.

கரோனா பாதிப்பிற்கு சீனா மற்றும் உலகச் சுகாதார அமைப்பைத் சாடிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் பரப்புரைக்கு சீனாவை முக்கிய ஆயுதமாகக் கையிலெடுத்துள்ளார்.

இந்நிலையில், சீனாவின் நான்கு செய்தி ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • In order to ensure greater transparency of CCP-run operations in the United States, I directed the designation of four additional PRC propaganda outlets as foreign missions.

    — Secretary Pompeo (@SecPompeo) June 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்காவில் இயங்கும் சர்வதேச ஊடகங்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்விதமாக, சீனாவைச் சேர்ந்த நான்கு செய்தி நிறுவனங்களை "foreign missions" எனப்படும் வெளிநாட்டுப் பணிகள் என்ற பிரிவின் கீழ் அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பட்டியலில், சீனா சென்ட்ரல் டெலிவிஷன், சீனா நியூஸ் சர்வீஸ், தி பீப்பல் டெய்லி மற்றும் க்ளோபல் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து அமெரிக்க தரப்பில், “ஊடகங்கள் என்பவை உண்மையை கூறும் கருவிகளாகச் செயல்பட வேண்டும். ஆனால் இவை சீனாவின் கம்யூனிஸ்ட் அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறது.

போலிக் கருத்துருவாக்கங்களை மேற்கொள்ளும் இந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மையை வெளிகாட்டவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தகுதியின் அடிப்படையில் ஹெச்1-பி விசா வழங்குங்கள்: ட்ரம்ப் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.