ETV Bharat / international

ட்ரம்ப்-ரஷ்ய உறவு குறித்த ஆவணங்கள் வெளியிடப்படுகிறது! - ரஷ்யா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருப்பதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து முயுல்லர் விசாரணை அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் ஒப்புக்கொண்டுள்ளார்.

ராபர்ட் முயுல்லர்
author img

By

Published : Mar 30, 2019, 10:21 AM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்ய அரசின் உதவியுடன்தான் வெற்றி பெற்றதாக எழுந்த குற்றசாட்டு குறித்து ராபர்ட் முயுல்லர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடைபெற்றது.

Robert Mueller's full report
வழக்கறிஞர் வில்லியம் பார்

இந்த விசாரணை கடந்த வாரத்துடன் முடிவடைந்த நிலையில் முயுல்லர் தன் 300 பக்க அறிக்கையை அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் வில்லியம் பாரிடம் அளித்தார். இந்த விசாரணை அறிக்கையை ஆராய்ந்த வில்லியம் பார், ட்ரம்பின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை என்றும், அதே சமயம் ட்ரம்ப் குற்றமற்றவர் என்பதும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், முயுல்லரின் விசாரணை அறிக்கையை வெளியட வேண்டும் என ட்ரம்பின் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் பல அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து முயுல்லரின் விசாரணை அறிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுடன் ட்ரம்பின் பதவிக்காலம் முடிவடைவதால், நடைபெறவுள்ள தேர்தலில் முயுலரின் விசாரணை அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு துருப்புச் சீட்டாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.