இந்தியா, சீனாவுக்கு இடையே எல்லையில் நடந்த சண்டையில்; இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வீர மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்தது, மத்திய அரசு. டிக்டாக் உள்ளிட்ட வருமானம் தரும் செயலிகள் தடைசெய்யப்பட்டதால், இதன் பயனர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.
இவ்வேளையில் இந்தியாவைப் பின்பற்றி அமெரிக்காவிலும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இதுகுறித்து கடிதமும் எழுதியுள்ளனர்.
அதில், 'அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. சீன அரசு இதனைப் பயன்படுத்தி அமெரிக்க மக்களின் தகவல்களைத் திருடிக் கொள்ளும் அபாயமும் உள்ளது.
டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!
எனவே, டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும்; இதற்கு முன்னுதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டு, அமெரிக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும்' என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றாக சில்5, சிங்காரி, ரோபோஸோ, மோஜ், இன்ஸ்டா ரீல்ஸ் போன்ற செயலிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனாலும், டிக்டாக் போன்ற பயனர்களுக்கு இலகுரக வசதியான செயலிகள் இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் பயனர்களிடையே நிலவி வருகிறது.