ETV Bharat / international

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா திடீர் ஆதரவு!

ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மசோதா ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

USA
author img

By

Published : Oct 16, 2019, 4:02 PM IST

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதே வேளையில், சிறப்பு அந்தஸ்து பெற்ற தன்னாட்சி பிராந்தியமாக 50 ஆண்டுகள் ஹாங்காங் செயல்படும் வகையில் சீனா சட்டம் இயற்றியது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஹாங்காங் மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங் அரசின் சர்ச்சைக்குரிய கைதிகள் பறிமாற்ற மசோதாவை எதிர்த்து இப்போராட்டமானது தொடங்கப்பட்டது. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் தீவிரமடையவே அங்குச் சீனா தனது ராணுவத்தை அனுப்பியது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் சீனா காட்டிவரும் தீவிரத்தை உலக நாடுகள் தீவிரமாக நோக்கி வருகின்றன.

ஜனநாயகத்திற்கு எதிராகவும் மனித உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் சீனாவின் செயல்பாடுகள் இருப்பதாக உலக அரங்கில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், ஹாங்காங் போராட்டக்காரர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் விதமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹாங்காங் தன்னாட்சிப் பகுதியில் வாழும் மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைகளுக்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. வன்முறைக்கு எதிராகச் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடுவது கண்டனத்திற்குரியது. இதற்கான தக்க பதிலடியைத் தரவேண்டும் சூழல் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.

இதையும் பாருங்க: சிரியாவின் உள்நாட்டுப் போர் பின்னணி

Intro:Body:

US congress bill for Hong Kong protesters 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.