சீனாவின் வூகான் நகரில் உருவாகிய கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளுக்குப் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்திவருகிறது. தற்போது சீனாவை விஞ்சும் அளவிற்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்துவருகிறது.
நேற்று மட்டும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 517 பேரும், வாஷிங்டனில் 136 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 750 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 227 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில், அமெரிக்க நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து இதுவரை மூன்றாயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சத்தை காசாக்கும் மருத்துவ நிறுவனங்கள்!