இந்தியாவில் கரோனா பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதைத் தடுக்க பல்வேறு அமைப்புகளுடன் மத்திய அரசு கைகோர்த்துள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்க பெருநிறுவனங்கள் பலவும் கரோனா தடுப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள தற்போது முன்வந்துள்ளன.
இது குறித்து இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் தலைவர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், இந்தியா - அமெரிக்கா தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் நோக்கில் செயல்பட்டுவருகின்றன. அதன்படி இந்திய நிறுவனங்களான மகேந்திரா, டாடா ஆகியவை பாதுகாப்பு உபகரணங்கள், ஐசியு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகின்றன.
அமெரிக்க நிறுவனங்களான கூகுள், ஐபிஎம், யூபர் ஆகியவையும் இந்தியாவுக்கு பல உதவிகளை மேற்கொண்டுவருகின்றன. அதன்படி, கூகுள் நிறுவனம் அரசின் கரோனா நிவாரண நிதி, மை கவர்னமென்ட் தளம், அரசு உதவி எண்கள் ஆகியவற்றை பராமரிக்கும் உதவிகளை மேற்கொண்டுவருகிறது.
அத்துடன், ஐபிஎம் நிறுவனம் இந்தியாவில் உணவு உற்பத்தி மற்றும் அதன் சந்தைப்படுத்தல் ஆகியவை சீராக நடைபெற கண்காணிப்பு தளத்தை பராமரித்துவருகிறது. பிளிப் கார்ட், புட் பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யூபர் நிறுவனம் இணைந்து இணைய வழி விற்பனை மற்றும் டெலிவரி ஆகியவற்றை மேற்கொள்கிறது.
ஜென்ரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்கள் முகக் கவசம், கிருமிநாசினி, மருந்துவ படுக்கைகள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றன.
இதையும் படிங்க: மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்