கரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் அதிகரித்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்நாட்டிற்கும், கனடாவிற்கும் இடையேயான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், அமெரிக்காவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, கனடா, மெக்சிகோ நாடுகளுடனான தனது நில எல்லைகளில் அமெரிக்கா சில கட்டுப்பாடுகளை விதித்து, நீட்டித்து வந்தது. தற்போது அந்த தடை நீட்டிப்பு முடிவடையடுள்ளது.
இந்நிலையில் பயண தடையை நீட்டிப்பது குறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், “எங்களுடைய குடிமக்களை காப்பதற்காகவும், கரோனா பரவலை தடுப்பதற்காகவும், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் தங்களது நில எல்லைகளில் தேவையற்ற பயணங்களுக்கான தடையை வருகிற மார்ச் 21ஆம்தேதி வரை நீட்டிக்கிறது.
எனினும், அத்தியாவசிய வர்த்தகம் மற்றும் பயணம் ஆகியவை தொடர்ந்து செயல்படுவதனை உறுதி செய்வதற்கான பணியையும் மேற்கொண்டு வருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...திஷா ரவியின் தனியுரிமையைப் பாதுகாப்பது அவசியம் - டெல்லி உயர் நீதிமன்றம்