ETV Bharat / international

அமெரிக்காவில் குறையும் குழந்தை பிறப்புகள் - காரணம் என்ன? - அமெரிக்காவில் குறையும் குழந்தை பிறப்புகள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குழந்தை பிறப்பு குறைந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

US births fall
US births fall
author img

By

Published : May 20, 2020, 2:38 PM IST

அமெரிக்காவில் குழந்தை பிறப்பு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்துவருகிறது. கடந்தாண்டு அளிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் குழந்தை பிறப்பு குறித்த தகவல்களை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், "2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு என்பது ஒரு விழுக்காடு வரை குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு 37 லட்சம் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்துள்ளனர். 40 வயதுக்குள்பட்ட பெண்கள் குழந்தையைப் பெற்றெடுப்பது தொடர்ந்து குறைந்துவருகிறது.

15 முதல் 19 வயதுவரை கொண்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஐந்து விழுக்காடுவரை குறைந்துள்ளது. இது 1991ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. அதேநேரம் 40-களில் இருக்கும் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுப்பது அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பின் அமெரிக்காவில் குழந்தை பிறப்பு என்பது ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. இதற்கு 2014ஆம் ஆண்டு மட்டும் விதிவிலக்கு.

பொருளாதார நிலை, வேலை நிலையற்று இருப்பது, கிடைக்கும் வேலைகளுக்கும் ஊதியம் மிகக் குறைவாக வழங்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கர்கள் குழந்தை பிறப்பை முடிந்தவரைத் தள்ளிப்போடுவதாகக் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜான் சாண்டெல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பிராடி ஹாமில்டன் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக 2020இல் குழந்தை பிறப்பு குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பது இந்தாண்டு இறுதியில்தான் தெரியும்.

இருப்பினும் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள், கருக்கலைப்பு ஆகியவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குழந்தை பிறப்பு இந்தாண்டு அதிகரிக்கும்" என்றார்.

இருப்பினும் கரோனா பரவல் காரணமாகப் பலரும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும் பொருளாதாரத்தில் நிச்சயமின்மை ஏற்பட்டுள்ளதாலும் குழந்தை பிறப்பு என்பது குறையும் என்றே பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தாண்டு (2020) குழந்தை பிறப்பு குறைவது உறுதி. அது எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதுதவிர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுப்பது 32 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இடம் இல்லை... பிரதமரை வெளியேற்றிய உணவகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.