ETV Bharat / international

போலிச் சான்று விவகாரம்; பாகிஸ்தான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை! - ஏ320 விமானம் தடை

வாஷிங்டன்: விமானிகள் போலிச் சான்று பெற்ற விவகாரத்தில் பாகிஸ்தான் விமானங்கள் அமெரிக்காவில் இயங்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Flight
Flight
author img

By

Published : Jul 10, 2020, 12:53 PM IST

கடந்த மே மாதம் 22ஆம் தேதி, பாகிஸ்தானில் ஏ 320 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த விமான பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 141 விமானிகள் போலி லைசென்ஸ் வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பாகிஸ்தானின் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனமான பி.ஐ.ஏ (Pakistan International Airlines)-வை, தங்கள் நாடுகளில் இயங்க தடை விதித்தன.

இந்நிலையில், விமானிகள் போலிச் சான்று பெற்றதைக் காரணம்காட்டி, அமெரிக்க போக்குவரத்து ஆணையமும் தற்போது பி.ஐ.ஏ விமானங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்ய சர்வதேச அமைப்புகள் தயங்கம் காட்டிவருகின்றன. தற்போதைய விமானப் போக்குவரத்து தடை, அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா: சீனா பகிரங்க குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.