ETV Bharat / international

அமெரிக்கர்கள் மியான்மர் செல்ல வேண்டாம்- வெள்ளை மாளிகை - வெள்ளை மாளிகை

அமெரிக்கர்கள் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் செல்ல வேண்டாம் என வெள்ளை மாளிகையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், “மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி, வன்முறை-கலவரம், கோவிட் பரவல்” உள்ளிட்வை காரணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

Myanmar unrest  US on Myanmar unrest  US on traveling to Myanmar  US travel advisory for Myanmar  அமெரிக்கர்கள்  மியான்மர்  வெள்ளை மாளிகை  US advises citizens against travelling to Myanmar

author img

By

Published : Mar 31, 2021, 10:37 AM IST

வாஷிங்டன்: மியான்மருக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், அந்நாட்டுக்கான பயண ஆலோசனையை 4 ஆம் நிலைக்கு குறைத்துள்ளது.

இந்த முடிவு செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு ஆலோசனையில் எடுக்கப்பட்டது. அப்போது, “மியான்மரில் உள்ள அமெரிக்க ஊழியர்கள் (அவசரக்கால ஊழியர்கள் அல்லாதோர்) வெளியேற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மியான்மரில் நடைபெறும் உள்நாட்டு கலவரம், ராணுவ ஆட்சி மற்றும் கோவிட் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அரசு அலுவலர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி மாற்றத்துக்க பிறகு 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் நாட்டை சோமாலியா, சிரியா போன்ற 4ஆம் நிலை பயண நாடுகளுடன் அமெரிக்கா இணைத்துள்ளது.

மியான்மரில் ஆளுங்கட்சியான ஆங்சாங் சூகி சரிவை சந்தித்ததும், அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : மியான்மர் ராணுவத்தின் செயலுக்கு ஜோ பைடன் கடும் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.