ETV Bharat / international

அமெரிக்காவில் ரத யாத்திரை நிகழ்வால் விமர்சனத்தைப் பெறும் இந்தியர்கள்! - Rath Yatra in USA

சர்வதேச கிருஷ்ண பக்தர்களான இஸ்கான் அமைப்பினர் சார்பாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ரத யாத்திரை பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

unseasonal-rath-yatra-in-usa-invites-severe-criticism

author img

By

Published : Oct 16, 2020, 3:51 PM IST

திருவிழாக்கள் நடத்தப்படாத இன்றைய கரோனா காலகட்டத்தில் அமெரிக்காவில் ரத யாத்திரை நடத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், அந்த ஃபேஸ்புக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டது இஸ்கான் அமைப்பு எனத் தெரிய வந்தது.

அந்த அமைப்பின் மூலம் பால்டிமோர் பகுதியில் அக்.10ஆம் தேதி ரத யாத்திரை கொண்டாடப்பட்டுள்ளது. இந்தத் திருவிழா ஏற்கெனவே ஜூன் மாதத்தில் கொண்டாடிய நிலையில், மீண்டும் கொண்டாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில், ஆடம்பர காரில் ஜெகன்நாத் பக்தர்களான இஸ்கான் பக்தர்கள் ரத யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். இதில் இந்தியர்களுடன் இணைந்து பல அமெரிக்க மக்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் அந்த காரின் முன்பகுதியில் இந்திய தேசியக் கொடியும் இடம்பெற்றுள்ளது.

ரத யாத்திரை நிகழ்வு
ரத யாத்திரை நிகழ்வு

ரத யாத்திரை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான பின்னர், நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒடிசாவின் பூரி பகுதியில் அமைந்துள்ள ஜெகன்நாத் கோயில் நிர்வாகம் சார்பாக இஸ்கான் அமைப்பினருக்கு, இதுபோன்ற ரத யாத்திரை நிகழ்ச்சிகளை தவறான காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் ரத யாத்திரை போன்ற நிகழ்வுகளுக்கு முடிவு ஏற்படுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இந்தியர்கள் பங்கேற்ற ரத யாத்திரை
இந்தியர்கள் பங்கேற்ற ரத யாத்திரை

இதையும் படிங்க: ”மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்” - ட்ரம்ப் வருத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.