ETV Bharat / international

அகதிகள் முகமையின் உயர் ஆணையராக பிலிப்போ கிராண்டி மீண்டும் தேர்வு! - அகதிகள் முகமை

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் உயர் ஆணையராக பிலிப்போ கிராண்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

UN General Assembly
UN General Assembly
author img

By

Published : Nov 24, 2020, 8:57 PM IST

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் பிலிப்போ கிராண்டி. 63 வயதாகும் இவர், கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஐநாவின் அகதிகள் முகமையின் உயர் ஆணையராக உள்ளார்.

இவரது பதவிகாலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஐநாவின் அகதிகள் முகமையின் உயர் ஆணையராக பிலிப்போ கிராண்டி மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஐநாவின் அகதிகள் முகமையின் உயர் ஆணையராக பிலிப்போ கிராண்டியை மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு அதே பதவியில் நீட்டிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிலிப்போ கிராண்டி சுமார் 30 ஆண்டுகள் ஐநாவில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இதையும் படிங்க:" கரோனாவை கட்டுப்படுத்தலாம், ஆனால்..." - தடுப்புமருந்து வரவிற்குப் பிறகான சூழல் குறித்து உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.