சவுதி அரேபியாவில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மரண தண்டணை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, பயங்கரவாத கும்பலை உருவாக்குவது போன்ற குற்றங்களுக்காக 37 பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சவுதி அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவர் மிச்செலி பாச்லெட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளி்க்கி்றது. மேலும், மக்கள் மத்தியில் மூன்று சிறார்கள் கொல்லப்பட்டது அருவெறுக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு 148 பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக 2016ஆம் ஆண்டு, அதிகபட்சமாக 47 பேருக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது.