நியூயார்க்: சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகள் கத்தார் நாட்டின் மீது அரசு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 2017ஆம் ஆண்டுமுதல் தடைவிதித்துள்ளன. வளைகுடா நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி, அவர்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிய அவர்கள், நாடுகளுக்கிடையேயான உறவுகளைப் புதுப்பிக்க கத்தார் சில கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டிய அவசியம் எனத் தெரிவித்துள்ளன. மேலும் கத்தார் நாடு பின்பற்ற வேண்டியவை குறித்த பட்டியலையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க குவைத் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்பு தெரிவித்து பாராட்டினார்.
மேலும், சர்ச்சையில் சிக்கியுள்ள அனைத்து நாடுகளும் தங்களது வேறுபாடுகளை முறையாகத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படும் என்று குட்ரெஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இருப்பினும், கத்தார் தன்மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்துவருகிறது.
இதையும் படிங்க: கத்தார் - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பும் பின்னணியும்!