ETV Bharat / international

ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்! - ஜோ பிடன்

ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

oee
joejoejoejoee
author img

By

Published : Nov 23, 2020, 2:43 PM IST

ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனின் கொள்ளை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாலா அடிகாவை நியமனம்செய்துள்ளார்.

ஜில் பைடனின் பிஹெச்டி படிப்பு நிலுவையில் இருப்பதால் வெள்ளை மாளிகைக்குச் (White House) சென்ற பிறகும் அவர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக தொடர்ந்து பணியாற்றுவார். ஜில் பைடனின் முடிவுகளில் மாலாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மாலா அடிகா ஜில் பைடனின் மூத்த ஆலோசகராகவும், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் பரப்புரையின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக, மாலா அடிகா, ஜோ பைடன் அறக்கட்டளையில் உயர் கல்வி மற்றும் ராணுவ குடும்பங்களுக்கான இயக்குநராகவும் இருந்துள்ளார்.

அதே போல், அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் போது, கல்வி மற்றும் கலாசார விவகார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார். உலகளாவிய மகளிர் பிரச்சினைகள் தொடர்பான மாநில அலுவலகத்தின் செயலாளராகவும், தூதரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மாலாவின் தாத்தா டாக்டர் சந்திரசேகர் அடிகா, குண்டாபூருக்கு அருகிலுள்ள குக்குஞ்சேயில் பெரிய தொழிலதிபராக இருந்தார். மாலாவின் தந்தை டாக்டர் ரமேஷ் அடிகா 1960 இல் மருத்துவக் கல்வியை முடித்த பின்னர் குண்டாபூரிலிருந்து 24 வயதில் அமெரிக்கா சென்றார். அவரது தாயார் ஜெயா அடிகா வேலூரில் மருத்துவம் பயின்றார்.

அமெரிக்காவில் பிறந்த மாலா, பூர்விகத்தை மறக்காமல் தனது கணவர் சார்லஸுடன் குந்தாபூரில் தனது நெருங்கிய உறவினர்களின் திருமண விழாக்களில் கலந்துகொள்வார். மாலா மற்றும் சார்லஸுக்கு ஆஷா என்ற 15 வயது மகள் உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.