ETV Bharat / international

துருக்கி மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 29 சிரிய வீரர்கள் உயிரிழப்பு! - syria turkey tension

டமாஸ்கஸ்: துருக்கி மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் சிரியாவின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 29 வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

syria soldiers killed in Turkey drone strike

author img

By

Published : Mar 1, 2020, 7:03 PM IST

மத்திய கிழக்கு நாடான சிரியாவில், 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த இந்தப் போரில் சிரியா அரசு, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பலான பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றியது.

அந்நாட்டின் வடமேற்கு மூலையில் துருக்கி நாட்டையொட்டியுள்ள, இத்லிப் மாகாணம் மட்டும் தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனைக் கைப்பற்ற சிரிய கூட்டுப் படையினர், அங்கு தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வந்தனர்.

இதனால் செய்வதறியாது ஆயிரக்கணக்கான சிரியர்கள் அண்டை நாடான துருக்கியை நோக்கிப் படையெடுத்தனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க துருக்கி, அதன் எல்லையையொட்டிய இத்லிப் உள்பட சிரியா மாகாணங்களில் 12 கண்காணிப்புக் கூண்டுகளை அமைத்து அங்கு ராணுவத்தைக் குவித்தது. எனினும், போர் நிறுத்த விதிகளை மீறி சிரிய அரசுப் படைகள் அவ்வப்போது அங்கு தாக்குதல் நடத்திவந்தன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இத்லிப்பில் சிரியா-துருக்கி படைகளுக்கு இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. இதனிடையே, இத்லிப்பில் நேற்று துருக்கி படையினர் மேற்கொண்டு ஆளில்லா விமான தாக்குதலில் 26 சிரிய படைவீரர்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை சிரிய படைகள் நடத்திய தாக்குதலில் 29 துருக்கிப் படையினர் உயிரிழந்தனர். இதற்கு, தக்க பதிலடி கொடுக்கப்படும் என துருக்கி அதிபர் எர்டோகன் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் இந்தச் செய்தியானது வெளியாகியுள்ளது.

இதனிடையே, மோதலை முடிவுக்கு கொண்டுவர நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்த துருக்கி அதிபர் எர்டோகனும், ரஷ்யா அதிபர் புடினும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : அமெரிக்க - தாலிபான்களிடையே கையெழுத்தானது ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.