கடந்தாண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று அந்நாட்டில் கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்த தீநுண்மி தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்து 12 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, அமெரிக்காவுக்கு முகத்திரை, பல உபகரணங்களை வழங்கி துருக்கி உதவியுள்ளதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எர்டோகன் எழுதிய கடிதத்தில், "கரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் துருக்கி துணைநிற்கும் என்ற உறுதிமொழியை அளிக்கிறேன். கரோனாவைக் கட்டுப்படுத்த அதிபர் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்ட விரும்புகிறேன்" என்றார்.
ஐந்து லட்சம் முகத்திரைகள், இரண்டாயிரம் லிட்டர் கிருமி நாசினி, 400 என்95 முகத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை அமெரிக்காவுக்கு துருக்கி வழங்கியுள்ளது.
இதேபோல், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் துருக்கி மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற அமெரிக்க துணை அதிபர்!