ETV Bharat / international

2021இல் அமெரிக்க பொருளாதாரம் வேற லெவல் - ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 26, 2020, 9:14 AM IST

Trump
Trump

கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. ஒருபுறம் வைரஸ் (தீநுண்மி) தொற்றாலும் மறுபுறம் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளாலும் அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுமார் இரண்டு டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்ததுடன், அந்நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கைத் தளர்த்துமாறு வற்புறுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் வாக்காளர்களிடையே பேசிய ட்ரம்ப், "மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளித்து, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு என்னை அதிபராக ஆக்குங்கள், 2021ஆம் ஆண்டு நமது பொருளாதாரம் அபார வளர்ச்சியடையும்.

அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் நீங்கள் அற்புதமான எண்களைக் காணப்போகிறீர்கள். சுருங்கச் சொன்னால் அடுத்த ஆண்டில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை அடைந்துகொண்டிருந்தது. இந்தக் கரோனாவால்தான் தற்போது மோசமான நிலைக்குச் சென்றுள்ளது" என்றார்.

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா அமல்படுத்திய 'ஒபாமாகேர்' என்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்படும் என்று ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதே தெரிவித்திருந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளாகக் கிடப்பிலிருந்த இத்திட்டம், தேர்தலுக்குப் பின் நிச்சயம் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது சுமார் 38 மில்லியன் மக்கள் வேலையிழந்ததாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1930-களில் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சிக்குப் பின் இவ்வளவு பேர் வேலையிழப்பது இதுவே முதல்முறையாகும்.

இது குறித்துப் பேசிய ட்ரம்ப், "இந்தாண்டு இறுதிக்குள், வேலையிழந்தவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று உறுதியளித்தார்.

2020ஆம் ஆண்டின் இறுதி காலாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்கள் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன் வெளியிடப்படும். இந்தத் தகவல்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் கடுமையாக எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: 'வூஹான் ஆய்வகங்களில் கரோனா உள்ளது உண்மைதான்; ஆனால்...?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.