17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 297 தொகுதிகளில் வெற்றியையும், 6 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், " இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது கட்சியான பாஜகவுக்கும் வாழ்த்துக்கள். மோடி மீண்டும் பிரதமரானதால் இரு நாட்டு உறவுகளும் மேன்மேலும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது", என குறிப்பிட்டுள்ளார்.