ETV Bharat / international

என்ஆர்சி பிரச்னைகள் குறித்து ட்ரம்ப் கேள்வி எழுப்புவார் - அமெரிக்க அலுவலர் - ட்ரம்ப் என்ஆர்சி மதச் சுதந்திரம்

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காஷ்மீர், என்ஆர்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவார் என அந்நாட்டு மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

modi trump meet
modi trump meet
author img

By

Published : Feb 22, 2020, 2:23 PM IST

அதிபர் ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் தொடர்பாக அமெரிக்க மூத்த அலுவலர் ஒருவர் தொலைபேசி மூலம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மோடியிடம் ட்ரம்ப் பேசுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், " (பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது) அதிபர் ட்ரம்ப் இருநாடுகளின் ஜனநாயகப் பாரம்பரியம், மதச் சுதந்திரம் பற்றி பேசுவார். குறிப்பாக, மதச் சுதந்திரம் குறித்து அவர் ஆலோசிப்பார்.

இந்தியாவின் ஜனநாயகப் பாரம்பரியம், அமைப்புகள் மீது நாங்கள் பெருமதிப்புக் கொண்டுள்ளோம். இந்தப் பாரம்பரியத்தை எப்போதும் பேணி காக்க இந்தியாவை ஊக்குவிப்போம்.

நீங்கள் எழுப்பிய சில விவகாரங்கள் எங்களை கவலை அடையச்செய்துள்ளது. இந்தப் பிரச்னைகள் குறித்து அதிபர் ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கண்டிப்பாகப் பேசுவார்.

மதச் சுதந்திரம், சிறுபான்மை மதத்தவருக்கு மரியாதை, மதச் சமயுரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளன. ஆகையால், அவை அதிபருக்கு முக்கியமானவை. அவை குறித்து கண்டிப்பாக கேள்வி எழுப்புவார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க : உலக நாடுகள் மத்தியில் பலம் பெறும் மோடி - பலன் பெறும் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.