அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி திடீரென மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இதுகுறித்து ஊடகங்கள் அவருக்கு என்ன பிரச்னையாக இருக்கும் என யூகித்து செய்தி வெளியிட்டிருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். பார்ப்போரை வாய் பிளக்கவைக்கும் கட்டுமஸ்தான உடலில் ட்ரம்ப் போஸ் கொடுப்பது போன்று அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
பிரபல ஹாலிவுட் திரைப்படமான ராக்கி 3-ல் குத்துச்சண்டை வீரராக நடித்த ஸ்வெஸ்டர் ஸ்டாலோனின் போஸ்டர் அது. ஃபோடோஷாப் (Photo Shop) மூலம் சில்வெஸ்டர் ஸ்டாலொனின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அதிபர் ட்ரம்ப்பின் முகமானது பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், தான் ஆரோக்கியமாக உள்ளேன் என்பதை வெளிக்காட்டும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.
'நிழலில் இருந்து நிஜ அதிகாரத்திற்கு...' - மராட்டியத்தைப் புரட்டிய தாக்கரே அரசியலின் கதை