ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக, பாரசீக வளைகுடாவில் பல்வேறு ராணுவ கப்பல்களையும், போர் விமானங்களையும் வாங்கி அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்நிலையில், ஈரானின் அண்டை நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவுக்கு எட்டு பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ. 555 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற ஒப்பந்தலின்றி இந்த விற்பனையை மேற்கொள்ள அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்டுத்தியுள்ளார் அதிபர் ட்ரம்ப். இந்த முடிவானது, ட்ரம்பின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரிடையே பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.